Thursday 30 July 2015

சனி பகவான் கோவில்

திருநள்ளாறு - குச்சனூர் சனீஸ்வரன் கோயில்
அருள்மிகு சனீஸ்வர பகவான் - சனி பகவானின் திருத்தலம்

திருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்! - திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்!
திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.திரு+ நள + ஆறு என்பது திருநள்ளாறு என்று ஆனது. இதில் 'நள' எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. - சனி பகவான் கோவில்

குச்சனூர் சனீஸ்வரன் கோயில் - சனி பகவானின் திருத்தலம்! - சனி தோஷம் நீக்கும் குச்சனூர் - சனி பகவான் கோவில்
இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. சனி தோஷம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும்.
சனி தோஷம் நீக்கும் குச்சனூர் சிறப்பம்சம் - சனி பகவான் கோவில்

கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தான். அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது. - சனி தோஷம் நீக்கும் குச்சனூர் - சனி பகவான் கோவில் - சனி பகவான் கோவில்

சனீஸ்வர பகவானின் திருத்தலம்: ஸ்ரீ ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வர பகவான்
ஏரிக்குப்பத்தில் அமைந்துள்ள எந்திர சனீஸ்வரரின் ஆலயம். 

 உலோகத்தால் செய்யப்பட்ட சனிபகவான் யந்திரத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கல்லில் எந்திரம் செதுக்கப்பட்டு சித்தர் பெருமக்களால் பூஜிக்கப்பட்ட ஒரு திருத்தலம் உண்டு. அதுதான் ஆரணி-ஏரிக்குப்பம் என்ற ஊர்.  திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஏரிக்குப்பம். ஆரணிபடவேடு சாலையில் சந்தவாசலுக்கு 3 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து நடுக்குப்பம்  வழியாக படவேடு செல்லும் பஸ்களில் ஏரிக்குப்பம் கூட்டுரோடு இறங்கி ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் இத் தலத்தை அடையலாம். ஆரணியிலிருந்து பிரதி சனிக் கிழமைகளில் ஏரிக்குப்பத்திற்கான சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. திருவண்ணாமலை மற்றும் போளூரிலிருந்தும் இங்கு வருவதற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆரணியில் தங்கும் வசதி மற்றும் உணவு வசதி உள்ளதால், ஆரணியில் தங்கியும் இவ்வாலயத்தை தரிசிக்கலாம். - சனி பகவான் கோவில்!

அருள்மிகு சனீஸ்வர பகவான் - சங்கடங்கள் போக்கும் சனீஸ்வரர்



No comments:

Post a Comment