Saturday 15 August 2015

சனி நீராடு

சனி நீராடு
சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்
                                                                            சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடைவதாக கூறுகிறார்கள்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.
ஒரு சிலர் என்ன சொல்றாங்கன்னா அவசர அவசரமா குளிக்கமா பொறுமையா உடல் அழுக்கு போகும் வரையில் குளிக்க வேண்டும் என்று குறிப்பதாக அமைகிறது, கிராமங்களில் ஒரு பழஞ் சொல் இருக்கிறது (அழுக்கு போக குளிச்சவனும் இல்ல , ஆசை தீர அணைச்சவனும் இல்லை ) , எனவே அழுக்கு போக குளிங்க

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.
நம்ப நாட்டு சீதோஷ்ன நிலைக்கு எப்பொழுதும் குளிர்ந்த நீரில் குளித்தால் தான், உடலுக்கு தேவையான சக்தியையும் என்றும் மாறா இளமையையும் கிடைக்கும்ன்னு சொல்லறாங்க சிலர் , குளிர்ந்த நீரில் குளிப்பது மதம் சார்ந்த நிகழ்வுல நாம கண் கூடா காண முடியும்


4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க
அது என்னன்னா சனி நீராடு என்பது சனியை குறிப்பது இல்லை அசனி நீராடு என்ற சொல் தான் மறுவி சனி நீராடு என்று ஆகி விட்டது . அசனி என்றால் சாம்பிராணி இலையை குறிக்கும் சொல் , நீரில் சாம்பிராணி இலையை போட்டு குளிப்பதை அப்படி சொல்லியிருக்கலாம் என்று கூறுகின்றனர்

இந்த தலைமுறை பசங்க சனி நீராடுன்னா , சனிக்கிழமை மது அருந்துவதை தான் இப்படி சொல்லியிருக்காங்கன்னு நம்பறாங்க !

No comments:

Post a Comment