Saturday 1 August 2015

சனி தோஷம் நீக்கும் வழிபாடு

 பரிகாரம் சனி தோஷம் நீங்கிட

மேஷம்  ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை சனீஸ்வரருக்கு எள்  எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.  செவ்வாய்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு  அர்ப்பணிக்கவும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை  சுண்டல் செய்து வழங்கவும்.  வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகை மலரை பெருமாளுக்கு சாத்தி வழிபடவும். பெருமாள்  கிருபையால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற  ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள்,  அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்

கடகம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். பௌர்ணமியன்று  நிலாவில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.  எலுமிச்சம் பழ சாரை பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு அபிஷேகம்  செய்து வர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்


சிம்மம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம்  செய்து விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன்  உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும். “எருக்க மலரை” சிவனுக்கு மாத சிவராத்திரி அன்று அர்ப்பணம்  செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி  நடக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.  வெண்ணையை ஆஞ்சநேயருக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப்  பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி  வணங்கி வரவும். முடிந்தவரை  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.  சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும்.  நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும். செவ்வாய்தோறும்  செவ்வரளிமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும்.  கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.   சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து   வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம்  அதிகரிக்கும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும். முடிந்தால்  தேங்காய் விளக்கு போடவும்.  சனிக்கிழமைதோறும் சிவன் கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு பிச்சிப் பூவை  அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.  சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு மரிக்கொழுந்துவை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை  படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் - சனி தோஷம் நீக்கும் வழிபாடு
வியாழகிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவக்கிரகங்களை 9 முறை வலம்  வரவும். வியாழக்கிழமைதோறும் சாமந்தி மலரை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் தடைகளெல்லாம் விலகி  நன்மைகள் ஏற்படும்.




No comments:

Post a Comment