Saturday 1 August 2015

இராவணனைப் பிடித்த சனி பார்வை!

இராவணன் தன் பராக்கிரமத்தால் நவ கிரகங்களைப் பிடித்துத் தன் சிம்மாசனத்துப் படிகளாகப் போட்டுவிட்டான். அவர்கள் முதுகில் கால் வைத்து அரியணை ஏறுவது அவன் வழக்கம். அதை ஒரு நாள் நாரதர் கண்டு, ""சனி பகவானே! எல்லாரையும் நீர் பிடிப்பீர். இப்பொழுது இராவணன் உம்மைப் பிடித்து விட்டானே?'' என்று பரிகசித்ததும் சனீஸ்வரன், ""என்ன செய்வது? என்னைக் குப்பு றப் போட்டு விட்டான். அதனால் அவனைப் பார்த்துப் பிடிக்க முடியவில்லை'' என்றார். அவ்வளவுதான். நாரதர் நேராக இராவணனிடம் சென்று, ""இராவணா! உன்னுடைய கீர்த்திக்கு சனியைக் குப்புறப் போட்டு முதுகிலா மிதிப்பது? மார்பின் மீதல்லவா அடிவைக்க வேண்டும்?'' எனக் கூற, உடனே இராவணன் அப்படியே மாற்றி விட்டான். அவன் படிகளில் ஏறும்பொழுது சனி பார்வை ஏற்பட்டு விட்டது.

No comments:

Post a Comment