Saturday 1 August 2015

சனிக்கு ஏன் தனி சிறப்பு

மனிதனுக்கு ஒரு குணம் உண்டு. அடங்கிப் போவதை யெல்லாம் அதட்டுவது; அடங்காதவைக்குப் பணிந்து விடுவது என்பதுதான் அது. நவகிரகங்களை அவனால் அடக்க முடியாமல் போனதால், அவற்றுக்குப் பணிந்து பக்தனாகி விட்டான். கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ஆதிக்கம் செலுத்துவதை ஆராய்ந்து சோதிடம் என்ற ஒரு சாஸ்திரத்தையே இயற்றினான். மனிதனைப் பாதிக்கும் நவகிரகங்களில் சனியும் ஒன்று. சகல துக்கங்களைப் போக்கி அருள் பவர்; உத்தமோத்தமர்; வில், அம்பு, கத்தி, வரதம் ஏந்தியவர். கோரைப் பல், கருமை யான தேகம் கொண்டவர். நீல ஆடை, நீலமணி, நீலோற்பலம் ஆகியவற்றை அணியாகக் கொண்டு விளங்குபவர் என்று தியான சுலோகம் வர்ணிக்கிறது. சில்ப ரத்னம், தத்துவ நீதி போன்ற நூல்களும் சனி பகவானை வர்ணிக்கின்றன. சனியைப்போல் கெடுப்பவரும் இல்லை. சனியைப்போல் கொடுப்பவரும் இல்லை. எனவே நமது எப்பிறவியி லும் நன்மையே நடக்க, அனைவரும் பாவங்களை களைந்து, புண்ணிய பாதைக்கு திரும்புவதே உத்தமம். அப்படி செய்தால் சனீஸ்வரர் நமக்கு பகையாக தெரியமாட்டார். மாறாக, அனைத்து நலன்களையும் வாரி வழங்கும் ஈசனாகவே தென்படுவார்.  ஒரு சமயம் சிவபெருமானை, சனி பிடித்த செய்தி அனைத்து லோகத்திற்கும் சென்று சேர்ந்தது. அதே சமயம், உன் கடமை தவறாமல், என்னையே பிடித்தமையால் உன் பொறுப்பை பாராட்டி என் பெயரையே உனக்கு பட்டமாக தருகிறேன். இனி நீ எல்லோராலும் சனி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுவாய் என்று சனியை வாழ்த்தி மறைந்தார் சிவபெருமான்.  முனிவர்கள், மன்னர்கள், மக்கள் அனைவரும் “உண்மையில் நாம் படும் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் சனியால் இல்லை. நமது முற்பிறவியில் நாம் நடந்து கொண்ட விதத்தினால்தான்” என்ற உண்மை அறியப்பெற்றனர். அதுவரை சனியை பழித்தும், பாவி என்றும், தோஷம் என்றும் தூற்றி வந்தவர்கள், தங்கள் பாவங்களில் இருந்து விடுபடும் வழியை தேடி சனியை வணங்க தொடங்கினார்கள். சனிக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்க ஆரம்பித்தன.

No comments:

Post a Comment