Tuesday 11 August 2015

திரிஷா - அடித்தார் அரைசதம்!

அரைசதம் அடித்த நடிகை திரிஷா
சென்னை:-நடிகை திரிஷாவின் சினிமாவாழ்க்கை சாதாரண துணை நடிகையாகவே தொடங்கியது. ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாகவந்தார். 1999-ல் இந்த படம் வெளியானது. அதன்பிறகு மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா இருந்தார். பிறகு அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல்படமான லேசா லேசா வெற்றிப்படமாக அமையவில்லை. 2002-ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்துதிரையுலகில் ஏறுமுகம் ஆனார். விக்ரமுடன் நடித்த சாமி, விஜய்யுடன் நடித்த ‘கில்லி’ படங்கள் அவரை உச்சத்தில்கொண்டு வைத்தன. கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில்ஜோடி சேர்ந்தார். கவுதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரம்ரசிகர்களை கிறங்கவைத்தது. ‘மங்காத்தா, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், ஆறு’ என பலபடங்கள் அவரை முதல்தர நாயகியாக்கின. தமிழ் படவுலக முன்னணிகதாநாயகர்களுடன் நடித்துவிட்டார். ரஜினிகாந்துடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. அது ஒருவருத்தமாகவே அவருக்கு இருக்கிறது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் ஒரு படத்தில் நடித்துவிட்டார். புதுமுக கதாநாயகிகள் வரத்துஅதிகம் இருப்பதால், போட்டி நிறைந்ததாக திரையுலகம் மாறிவிட்டது. ஒருசில படங்களுக்குமேல் தொடர்ந்து கதாநாயகியாகதாக்குப்பிடிப்பது கஷ்டம். இந்த போட்டியிலும் பதினைந்து வருடங்கள் கதாநாயகிஇடத்தை திரிஷாதக்க வைத்துக்கொண்டு வருகிறார். காதல், திருமண முறிவு சர்ச்சைகளில் சிக்கியும்மார்க்கெட் சரியவில்லை. சமீபத்தில் அவரது 48-வது படமாக ‘சகலகலா வல்லவன்’ வந்தது. அடுத்து அவர் கைவசம் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் ‘தூங்காவனம்’, சுந்தர்.சி டைரக்ஷனில்நடிக்கும் ‘அரண்மனை’ 2-ம் பாகம் படங்கள் உள்ளன. இதோடு 50 படங்களில் நடித்துவிட்டார். ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன் முடிவடைந்தது. விரைவில் இவ்விரு படங்களும் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. பதினைந்து வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாக நீடிப்பதை சாதனையாக சக நடிகர்-நடிகைகள் பாராட்டுகிறார்கள்.


திரிசா:- இவர் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கும் முன் சென்னை அழகியாக 2000ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இயற் பெயர்-திரிஷா கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு-மே 4, 1983
இந்தியா, சென்னை , தமிழ் நாடு
குறிப்பிடத்தக்க படங்கள்-சாமி (2003)
வர்ஷம் (2004)
கில்லி (2004)
அத்தடு (2005)
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005)
உனக்கும் எனக்கும் (2006)
ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே (2007)
கிரீடம் (2007)
மங்காத்தா (2011)
திரைப்படம்    மொழி
ஜோடி              தமிழ்
மௌனம் பேசியதே    தமிழ்
மனசெல்லாம்    தமிழ்
சாமி              தமிழ்
லேசா லேசா    தமிழ்
அலை              தமிழ்
எனக்கு20உனக்கு 18  தமிழ்
வர்ஷம்             தெலுங்கு
கில்லி              தமிழ்
ஆய்த எழுத்து    தமிழ்
திருப்பாச்சி    தமிழ்
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா    தெலுங்கு
ஜி              தமிழ்
நந்து                  தெலுங்கு
அல்லாரி புல்லோடு    தெலுங்கு
ஆறு              தமிழ்
ஆதி              தமிழ்
பௌர்ணமி              தெலுங்கு
பங்காரம்              தெலுங்கு
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் தமிழ்
ஸ்டாலின்              தெலுங்கு
சைனிகுடா              தெலுங்கு
ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே    தெலுங்கு
கிரீடம்              தமிழ்
கிருஷ்ணா              தெலுங்கு
பீமா              தமிழ்
வெள்ளி திரை    தமிழ்
குருவி              தமிழ்
புஜ்ஜிகாடு              தெலுங்கு
அபியும் நானும்    தமிழ்
கிங்              தெலுங்கு
சர்வம்              தமிழ்
சங்கம்              தெலுங்கு
நமோ வெங்கடேசா    தெலுங்கு
விண்ணைத்தாண்டி வருவாயா    தமிழ்
யே மாயா சேசாவே    தெலுங்கு
காட்டா மேதா    இந்தி
மன்மதன் அம்பு    தமிழ்
குஷிகா              தெலுங்கு
மங்காத்தா              தமிழ்
பெயரிடப்படாத திரைப்படம்    இந்தி
என்னை அறிந்தால்    தமிழ்


No comments:

Post a Comment