Wednesday 29 July 2015

சனி தோஷம் நீக்கும் பாடல்

நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்
மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.


 சனி பகவான் காயத்திரி மந்திரங்கள்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்


சனி காயத்திரி மந்திரம்
சனைச்சராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்

ஸ்லோகம்

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:

(மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.)

சதுர்புஜம் சனிம் தேவம் சாப தூணிக்கு பாணகை
ஸஹிதம் வரதம் பீத்தம்ஷ்ட்ரம் நீலோற்பலாற்ருதீம்
நீலமால்யானு லேபனம் ச நீலரத்னைரலங்க்ருதம்
ஜ்வாலோர்தல் மகுடா பாஸம் நீலக்ருத ரதான்விதம்
மேரும் ப்ரதகஷிணம் யாந்தம் சர்வலோக பயாவஹம்
க்ருஷ்ணாம்பர தரம் தேவம் த்விபுஜம் க்ருத்ரஸம்ஸ்திதம்
ஸர்வவ பீடாஹரம் ந்ரூணாம த்யாயேத் க்ரஹயோத்தமம்
நீலாஞ்சன சமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயாமார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைஸ்ச்சரம்

மேற்கண்ட மந்திரத்தை கூறி சனிபகவானை தினமும் தியானித்து வர அவரது தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் குறையும் என்பது நம்பிக்கை.  

சனி தோஷம் விலக்கும் பாடல் :

அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் (மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசியினர்) இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.

1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வௌ¢ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே

2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே

3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே

4. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே

5. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே

6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே

7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே

8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே

9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே

10. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே

11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில்

நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு, கேது, சனி என்பனவாம். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வரபட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார்.
பன்னிரென்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமசனி போன்ற பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர்காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள். சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை, அபிஷேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும். சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன் கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப் பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும். எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண வேண்டும். சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வபத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள் செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு. சனி விரதத்திற்கு மட்டும் ”அப்பியங்க ஸ்நானம்” என்னும் நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும். ஆனால் மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும் நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment