Thursday 9 July 2015

“ஆடி” வருது பின்னே!” ஆடு விலை ஏறுது முன்னே...!

ஆடி” வருது பின்னே!” ஆடு  விலை ஏறுது முன்னே...!

சென்னை: ஆடி மாதம் நெருங்கி வருவதால் ஆடுகளுக்கான கிராக்கி பெருமளவில் சந்தையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், நேர்த்திகடன் செலுத்தும் வகையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதையும், கோயில்களுக்கு நேர்ந்து விடுவதையும் பக்தர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே, இந்த மாதத்தில் ஆடு மற்றும் கோழிகளின் விலை பல ஆயிரம் ரூபாய்களை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.  சில பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர். காரணம், விலை குறைவு மற்றும் நோய் இல்லாமல் இருக்கும் என்பதே.இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆடி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் இப்போதே ஆடு, கோழிகளுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளனர். பலி அல்லது நேந்துவிடுவதற்கான விழாவின் போது அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்பதால் பக்தர்கள் இப்படி முன்னெச்சரிக்கையாக செயல்படுகின்றனர்.ஆடுகளை பக்தர்கள், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குவதால், அதற்கேற்ப விலையும் அதிகரிக்கும். வரும் 17 ஆம் தேதி ஆடி மாதப்பிறப்பு என்பதால் அன்றைய தினமே பெரும்பாலான பக்தர்கள் கோயில்களில் ஆடுகளை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றுவர்.இதனால் ஆடுகள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதற்கு முன்பு வெறும் 4 ஆயிரம் முதல் இந்த ஆடுகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment