Tuesday 28 July 2015

பயம் வேண்டாம் சனியைக் கண்டு!

சனீஸ்வரனை கண்டு ஏன் இந்த பீதி?

போலீஸை கண்டால் திருடன் தானே பயப்படவேண்டும்? நல்லவர்கள் ஏன் பயப்படவேண்டும்? சனீஸ்வரன் பாடாய்படுத்துவான் என்பது உண்மைதான், மிகவும் சிரமம் கொடுப்பான் என்பதும் உண்மைதான், ஏழரைச் சனியின் போது சிறைத் தண்டனை கூட கொடுப்பான் என்று கூறுவதெல்லாம் உண்மை தான். ஆனால் அது எல்லாம் யாருக்குத் தெரியுமா? தீயவைகளையே சிந்தித்து தீயவைகளையே செய்துகொண்டு இருக்கின்றவர்களுக்குத்தான். அவர்கள் தான் பயப்படவேண்டும். ஊரை அடிச்சி உலையில் போடுபவனுக்கு கெட்டதுதான்  நடக்கும். அவர்களுக்குத் தான் இப்போது நேரம் சரில்லை. இதுவரைச் செய்த வந்த தவறுகளுக்கு எல்லாம் தப்பி வந்தவர்கள், இனி செய்யாத தவறுக்கு வசமாக அவர்கள் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலை வரும். இதுவரை கெட்டது செய்தாலும் அது நல்லதாய் முடியக் கண்ட தீயவர்கள் இனி நல்லது செய்தாலும் அது கெட்டதாய் போய் முடியும் வைகையில் திருப்பங்கள் நேரும். நல்லது என்றால் புண்ணிய செயல்கள் அல்ல. அவர்களுக்கு லாபம் தரும் என்று கருதி அவர்கள் செய்யும் நடைமுறை காரியங்கள். அடுத்தவர்களை பழி சுமத்தி வாழ்ந்து வந்தவர்களுக்கெல்லாம் . வீண் பழிகளில் சிக்கி அவஸ்தைபடுவார்கள். துடுக்குத்தனமாக பேசிக்கொண்டு திரிந்தவர்கள் எல்லாம், அந்த துடுக்குத்தனத்தின் காரணமாக பிரச்னையில் சிக்குவார்கள். ஏய்த்து பிழைத்துகள் எல்லாம், மற்றவர்கள் குடியை கெடுத்து வாழ்ந்து வந்தவர்கள் எல்லாம் இனிமேல் அவ்வாறு செய்ய முடியாது. அவர்கள் செயல் முடக்கப்படுவார்கள். முதியோர்களையும், பெண்களையும், திருநங்கைகளையும், சமூக பெரியோர்களையும் கேலி செய்தவர்களுக்கு அதற்குரிய தண்டனையை சனீஸ்வரன் கொடுப்பான். சுயநலமே வாழ்க்கை என்று கருதி, தான தர்மங்களில் ஈடுபடாமல், தன் மனைவி மக்களுக்கு சொத்து சேர்க்க மட்டுமே நேரத்தை செலவழித்தவன் எல்லாம் இனி சனீஸ்வரனிடம் சிக்கி படாத பாடு படுவான். இனி அவன் நேரம் வழக்காடு மன்றங்களிலும், வழக்கறிஞர்களிடமும் தான் அதிகம் செலவாகும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் விரதம் அனுஷ்டிக்காமல் அன்று வயிறு புடைக்கத் தின்பவனும், இறைவனை தொழாதவனும் ஆலயங்களுக்கு செல்லாதவனும், அறச் செயல்களில் ஈடுபடாதவனும் சனீஸ்வரனிடம் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு சோதனை மேல் சோதனை தந்து, “உன் கையில் ஒன்றுமில்லை… ஓடு… போ சர்வேஸ்வரனை சரணடை” என்று இறைவனை நோக்கி ஓடவைப்பது சனீஸ்வரனின் முதல் வேலையாக இருக்கும். கேளிக்கையும் கொண்டாட்டமுமே வாழ்க்கை என்று கருதி, அறநெறியை மறந்து, கடமையை புறக்கணித்து, மது மயக்கத்தில் ஆட்டம்போட்டு வந்தவர்களின் வாழ்க்கை இனிமேல் ஆட்டம் காணும். வெட்டிப் பேச்சு பேசுவது, வம்பு பேசுவது, புறம் பேசுவது, தகுதியற்றவர்களை புகழ்ந்து பேசுவது, அரசியல் சண்டை சச்சரவு செய்வது, உள்ளிட்ட பயனற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தவர்களுக்கு அதற்குரிய விலையை சனீஸ்வரனிடம் கொடுக்க வேண்டியிருக்கும். பொறாமையின் காரணமாக பிறர் முன்னேற்றத்தை தடுத்தவர்களின் பாடு இனி திண்டாட்டமாகத்தான் இருக்கும். தான தர்மங்களில் ஈடுபடாத கருமிகள் தங்கள் சொத்துக்களை கள்வர்களிடம் பறிகொடுப்பார்கள். சனீஸ்வரனை கண்டு மேற்கண்ட  பாபச் செயல்கள் செய்தவர்கள் தான் பயப்படவேண்டும். தான தர்மங்களில் ஈடுபடுபவர்கள், பாப காரியங்களுக்கு அஞ்சுபவர்கள், சிவராத்திரி, ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள், கிரிவலம் செல்பவர்கள், கோ-சம்ரோக்ஷனம் செய்பவர்கள், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவியவர்கள், ஏழை எளியோருக்கு ஆடை தானம் செய்தவர்கள், உதிரம் (ரத்தம்) தானம் செய்பவர்கள், அற்றார் அழிப்பசி தீர்க்கும் அன்னதானம் செய்பவர்கள், ஏழை குழந்தைகளுக்கு சேவை நோக்கோடு வித்தை சொல்லித் தருபவர்கள், அம்பிகை வளர்த்த அறங்களில் ஒன்றையேனும் செய்பவர்கள் இவர்கள் யாரும் சனீஸ்வரனை கண்டு பயப்படவேண்டியதில்லை.உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை என்று கூறப்பட்டிருந்தால் தயவு செய்து அச்சப்படவேண்டாம். சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மையே செய்யும். நவக்கிரகங்கள் என்பவை இறைவன் இட்ட ஏவலை, அவன் வகுத்த நெறிமுறைகளின்படி அவன் சார்பாக செய்பவை. சனிப்பெயர்ச்சியால் கலங்குவதற்கு பதில் இறைவனை சிந்திப்பதற்கும், தான தர்ம காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கும் அருமையான வாய்ப்பு கிடைத்து உள்ளதாக கருதி நல்ல செயல்களில் ஈடுபட்டு வாருங்கள். நல்லதே நடக்கும் என்று நினையுங்கள். நல்லதே பேசுங்கள். நல்லதே செய்யுங்கள். நல்லதே நடக்கும்! காலதேவனும், சனீஸ்வரனும் கடமையை செய்யும் தர்ம தேவதைகள். காக்கும் நேரம் வரும்போது நிச்சயம் ஓடி வந்து காப்பார்கள். சனீஸ்வரனுக்கு பரிகாரம் செய்ய விரும்புகிறவர்கள் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் எப்பொழுதும் நன்றாக இருக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சுத்த பத்தமாக நீராடி முடித்து, காக்கைக்கு எள்ளும் தயிரும் கலந்த சாதம் கொடுத்து வரவேண்டும். கருங்குவளை மலர்களால் எமனுக்கு அர்ச்சனை செய்து, சிவாலயங்களில் சனீஸ்வரனுக்கு எள் முத்தளத்துடன் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி, எள்ளுருண்டை தானம் செய்யவேண்டும். எள்ளுருண்டையை தானமாக ஏற்க சிலர் தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நல்லெண்ணையை தானமாக தரலாம். ஆலயங்களில் தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கித் தரலாம்.திருநள்ளாறுக்கு ஒரு முறை சென்று அங்கிருக்கும் தர்பாரண்யேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்யுங்கள். ஆலய தரிசனம், கோ சம்ரோக்ஷனம், அன்னதானம், ஊனமுற்றோர்களுக்கு உதவி, பார்வையற்ற மாணவ மாணவியர் தேர்வு எழுத உதவுது, திருகோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி, மரம் நடுதல், ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வாருங்கள். சனீச்வரன் உங்களுக்கு நல்லதே செய்வான். “சனி கொடுத்தால் எவர் தடுப்பர்?” என்ற பழமொழியே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சூரியன் ஆயிரம் கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனி பகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அவற்றின் செயல்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார். சனி பகவான் தரும் தொல்லைகளை விட நன்மைகள் அதிகம். கீழ் குறிப்பிட்டுள்ள சனி காயத்ரி ஸ்லோகத்தை தினமும் உச்சரிப்பதின் மூலம் அனைத்து நன்மைகளையும் உங்களுக்கு சனீஸ்வரர் வழங்குவார். இந்த சனி பெயர்ச்சி மூலம் சனீஸ்வரர் நம்மிடம் எதிர்பார்ப்பது, கடவுளின் குழந்தைகளான விலங்கு மற்றும், பறவைகளுக்கு அதாவது நாய், பூனை, மாடு, காகம், குருவி போன்ற ஜீவராசிக்கு உணவளிப்பது, ஏழை, எளியவர்களுக்கு உதவுவது, நல்ல மனதுடன், யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருப்பது என்பதே. இதை செய்தால் சனீச்வர பகவானின் பூரண ஆசியை பெற்று உங்களுக்கு நல்லது நடக்க போவதை நீங்களே கண்கூடாக பார்க்க போகிறீர்கள் என்பதே ஜோதிட உண்மை.

சனீச்வர காயத்ரி
“ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்”


மனிதனின் வாழ்க்கையை ஏழரை சனிக்கு முன்பு (ஏ.மு) ஏழரை சனிக்கு பின்பு (ஏ.பி) என்று கணிக்கப்படுகிறது. ஏழரை சனியை கண்டு பயப்பட வேண்டியதில்லை. ஏழரை சனிக்கு பிறகு ஒருவருக்கு தெளிவும், நிதானமும், அனுபவபூர்வமாக பேசும் திறனும் ஏற்படுகிறது.  சிறு வயதில் வரும் சனியை மங்குசனி என்றும், வாலிபத்தில் வருவதை பொங்கு சனி என்றும், வயதான காலத்தில் வருவதை கங்கு சனியென் றும், அடுத்து வருவதை மரண சனி என்றும் அழைக்கிறோம். குழந்தை பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சச்சரவு என பிரச்னைகள் வந்து நீங்கும். 27 வயதுக்கு மேல் ஏழரை சனி நடந்தால் உறங்கி கிடக்கும் திறமைகளை பொங்க வைக்கும். செல்வ த்தை அள்ளி கொடுக்கும். ஆனால் கொஞ்சம் கெடுதல் செய்யும். பொங்கு சனி நடக் கும் போது ஆணவம், கர்வம் கூடாது.  ஏழரை சனி நடக்கும்போது 4, 8 ஆகிய எண்ணுள்ள வீட்டில் இருக்கக்கூடாது. மேற்கு வாசல் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும். அந்த காலகட்டத்தில் புதிய விருந்தினர் களை வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது. பிரதிபலன் பாராமல் உதவி செய்தால் பொங்கு சனியில் நல்ல பலன் கிடைக்கும்.
சனீஸ்வரனின் சிறப்பம்சங்கள்

No comments:

Post a Comment