Thursday 9 July 2015

தலைமை நீதிபதி தத்து- "நாலு சுவற்றுக்குள் ஆபாச படம் பார்ப்பதை கோர்ட் தடுக்க முடியாது:"

டெல்லி: இந்தியாவில், ஆபாச இணையதளங்களை தடை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. நாலு சுவற்றுக்குள் ஆபாச படம் பார்ப்பதை தடுத்தால், தனது அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாக யாராவது புகார் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்து உள்ளார். இந்தியாவில் செயல்படும் ஆபாச வெப்சைட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை யுடன், வழக்கறிஞர் கமலேஷ் வாஸ்வனி, உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். அதில் "இந்தியாவில் 4 கோடி ஆபாச வெப்சைட்டுகள் உள்ளன. இவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  இடைக்கால தடை இதனிடையே, மனு மீதான விசாரணை, தற்போது, தலைமை நீதிபதி தத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆபாச வெப்சைட்டுகளை முடக்க அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அப்போது, மனுதாரர் சார்பில், கேட்டுக்கொள்ளப்பட்டது. உரிமை பாதிக்கும் இதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார். "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை கோர்ட் பிறப்பிக்க முடியாது. ஏனெனில், அப்படி பிறப்பித்தால், 18 வயது நிரம்பிய யாராவது கோர்ட்டுக்கு வந்து, இந்திய அரசியல் சாசனம் பிரிவு 21ன்கீழ், வழங்கப்பட்டுள்ள உரிமையை முடக்க முடியாது. எனக்கு 18 வயது நிரம்பிவிட்டது. நான்கு சுவற்றுக்குள் நான் ஆபாச வெப்சைட்டுகளை பார்க்கிறேன். எப்படி தடை போட முடியும் என்று கேட்க கூடும்" என்று தத்து தெரிவித்தார்.மத்திய அரசு எடுக்கட்டும் அதேநேரம், ஆபாச வெப்சைட்டுகளால் தீமை விளையும் என்பதையும் தத்து மறுக்கவில்லை. "இது சீரியசான விஷயம்தான். ஏதாவது நடவடிக்கை எடுத்தாகப்பட வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தலைமை நீதிபதி தத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment