Thursday 30 July 2015

சனிதிசை - சனி திசை நல்லதா கெட்ட்தா - சனி / மாந்தி / குளிகன்

 சனி திசை நல்லதா கெட்ட்தா? - தசா புத்தி சிறு விளக்கம் - அட்டமத்து சனி
 தசா புத்தி சிறு விளக்கம்
திசை என்பது நவகிரகங்களும் நம்மை ஆட்கொள்ளும் அல்லது ஆட்டிப்படைக்கும் காலம் எனலாம். இந்த காலம் கிரகத்திற்கு கிரகம் வேறுபடும்.பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்க்கும் அதனுடைய திசை காலம் வேறுபடும். இந்த காலம் மனிதனின் ஆயுள் அடிப்படையில் நம் முன்னோர்கள் வகுத்தனர். அதாவது 120 ஆண்டுகள். இப்பொழுது யாரும் அவ்வளவு காலம் வாழ்வதில்லை என்றாலும் சராசரியான மனிதனின் ஆயுள் 120 என்ற அடிப்படையில் வகுத்துள்ளனர்.

சனிதிசை - சனி திசை நல்லதா கெட்டதா..? - சனி திசை நல்லதா கெட்ட்தா..?

சனிதிசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும். சனி ஒரு பாவ கிரகம் என்பதால் 3,6,10,11 போன்ற ஸ்தானங்களில் அமைவது நல்லது. அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். சனி மக்கள் காரகன் என்பதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியலில் உயர்பதவிகளும் தேடி வரும். லட்ச லட்சமாக சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும் சனி பகவான் கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க முடியாது. இத்திசை காலங்களில் பூமி மனை, வண்டி வாகன சேர்க்கைகள், செல்வம் செல்வாக்கு யாவும், நிறைய கடன் வாங்கும் தைரியமும் அதனால் வாழ்வில் முன்னேற கூடிய வாய்ப்பு கடன்களையும் அடைக்க கூடிய வல்லமை போன்ற யாவும் அமையும். பலரை வழி நடத்தி செல்லும் வாய்ப்பு, வேலையாட்களால் அனுகூலம் பழைய பொருட்கள், இரும்பு சம்மந்தப்பட்டவை போன்ற வற்றாலும் அனுகூலம் உண்டாகும்.  அதுவே சனி பகவான் பலமிழந்திருந்து திசை நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், எலும்பு தொடர்புடைய நோய்கள் உண்டாகும். அதிலும் சூரியனின் வீட்டிலோ, சாரத்திலோ சனி அமைந்தால் தாய் தந்தையருக்கு பாதிப்பு, கல்வியில் தடை, தகுதிக்கு குறைவான வேலைகளை செய்யும் அமைப்பு, வேலையாட்களால் பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை உண்டாகும். நிறைய கடன் வேண்டிய சூழ்நிலையும் அதை அடைக்க முடியாமல் அவப்பெயரும் உண்டாகும். மற்றவரால் வெறுக்க கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையும் மந்தமடையும்.  

சனி ஜாதகத்தில் மோசமாக இருந்தால்
சனி தசை வந்துவிட்டாலே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். யார் என்ன சொன்னாலும் நம்பக் கூடாது. உங்க மனைவியை அங்க பார்த்தேன், அவர் அப்படியா? மாமனார், மாமியாரைப் பற்றி எல்லாம் தவறாகச் சொல்வார்கள்.
எதையும் நம்பக் கூடாது. அட்டமத்து சனி, நேரடியாக சண்டையை உருவாக்காமல், நம்மைச் சார்ந்த உறவினர்கள் மூலமாக ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும். பரிகாரம் என்று சொன்னால், முக்கியமாக சந்தேகப்படுதலை தவிர்க்க வேண்டும். உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சுவையான உணவுகளைக் குறைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாமல் சாப்பிடவும், சகிப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மை கேவலாமாக எது சொன்னாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். பொதுவாக சனிக்கிழமைகளில் எள் விளக்கு ஏற்றலாம். அல்லது சனிக்கிழமைகளில் ஊனமுற்றவர்கள் அல்லது மனநலம் குன்றியவர்களுக்கு உதவலாம். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்கலாம். எதை எடுத்தாலும் தாமதமாகும். கோபப்படக் கூடாது. தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லலாம்.

சனி பகவானின் நிறம் கறுப்பு.அவர் ஆட்சி செய்யும் திசை மேற்கு.சனியின் சொரூபம் விஸ்ணு சொரூபம்.அவருக்கு ஏற்ற தானியம் எள்.அவருக்கு ஹோம்ம் செய்ய உபயோகப்படும் சமித்து வன்னி.அவருக்கு சாத்த வேண்டிய வஸ்திரத்தின் நிறம் நீலம்.பொருந்தும் ரத்தினம் இந்திர நீலம்.அவருக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் எள்ளு சாதம்.பூஜிக்க உகந்த மலர் கருங்குவளை.அவருக்கு பொருந்தும் உலோகம் இரும்பு. சனிக்கு வாகனம் காக்கை.(ஆனால் வட நாட்டு பழக்கத்தில் இருக்கும் தியான சுலோகங்கள் கழுகை சனிக்கு வாகனமாக சொல்கின்றன..)நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம்.

 பொதுவாக துலாம் ராசியில் உச்சம் பெரும் சனி பகவான், தனது திசை மற்றும் புத்தி காலங்களில் ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு. ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று வக்கிரக நிலையில் இருப்பதால் நன்மை தர இயலாது என்பதும் பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு.

No comments:

Post a Comment