Tuesday 11 August 2015

சனி கிரக சந்திரனில் ஏரிகள்- விஞ்ஞானிகள் தகவல்

சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்

பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பது போன்று சனி கிரகத்துக்கு பல சந்திரன்கள் உள்ளன. அவற்றின் மிகப் பெரிய சந்திரனாக டைட்டான் திகழ்கிறது. பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? அங்கு உயிரினங்கள் வாழ தகுதியான சூழ்நிலை இருக்கிறதா? என பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் சனி கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கேசினி’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது சனிகிரகத்தை சுற்றி வந்து தகவல்களை அனுப்பி வருகிறது. சனி கிரகத்தின் டைட்டான் சந்திரனில் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி கழகமும் இணைந்து கேசினி–ஹீஜென் என்ற ரோபோவை அங்கு தரையிறக்கி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அதை தொடர்ந்து அந்த ‘ரோபோ’ அனுப்பியுள்ள பல தகவல்களின் அடிப்படையில் டைட்டானில் ஏரிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டைட்டான் சந்திரனில் நில அரிப்பு ஏற்படுவதையும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் அங்கு தண்ணீரில் கரையக்கூடிய சுண்ணாம்புக் கல், ஜிப்சம் பாறைகள் மழை மற்றும் தண்ணீரால் அரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதை கண்டறிந்தனர். அதன் மூலம் அங்கு ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment