Tuesday 28 July 2015

சனி கிரகம் - sani kirakam

இராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என்று விருப்பினான்.  அவனோ நவக் கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவ னாயிற்றே! ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன்ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விட்டான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும் அதில் எல்லா கிரகங்களும் இருக்கு மேயானால் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் வைத்துக் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம்வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான். தேவர்கள் இதைக் கண்டுமனம் பதபதைத்தனர்.ஒரு அசுரன் இப்படி பிறந்தால் அவனை மரணமேநெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதானே இருக்கும், என்ன செய்வது என்ற றியாது கலங்கினார்கள்.. அப்போது நாரதர் சனி பகவானிடம்சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவேமற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார். சனிபகவானும் அவர் வேண்டு கோளுக்கு கிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில்12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடதுகாலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித்ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள்எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார்.தன் எண்ணம்நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டார். உடனே 12ம் இடத்தில்காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான்இது தான் சனி பகவான் நொண்டியான கதை. 

இந்த கதையின் நோக்கம்:-
ஜோதிடம் படிப்பவர்களுக்கு ஆர்வம்ஏற்படுவதற்காகவும், சனி மெதுவாக சுற்றுவதை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளவும், ஜோதிடப் பாடங்கள் எளிதில் மனதில் நன்கு பதியும் பொருட்டும் அந்தக்காலத்தில் இந்த கதையை சொல்லியிருக்கலாம் என்று  நான் நினைக்கிறேன்..

.சூரிய குடும்பத்தில், சனி சூரியனிலிருந்துஆறாவது கிரகமாகவும் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளார். அவருக்கு அறுபத்திரண்டு உபகோள்கள் உள்ளன. சூரியகுடும்பத்தில் சூரியனைச்சுற்றி வரும் கிரகங்களில் மிகவும்  மெதுவாகச்  சுற்றிவரும் கிரகம் சனி ஆகும். சனி ,சூரியனை ஒரு முறை சுற்றி வலம்  வரமுப்பது வருடங்கள் ஆகும். ஒவ்வொரு இராசியிலும் இரண்டரைவருடங்கள் தங்கி பன்னிரண்டு இராசிகளை முப்பது வருடங்களில்கடக்கிறார். வடமொழியில் சனி என்றால் மெதுவாகச் செல்பவன் என்று பொருள். சனியின்நட்புக்கிரகம் சுக்கிரன் ஆகும். சனிபகவானின் மற்ற பெயர்கள். மார்க்கண்டேய புராணம்த்தில்உள்ளபடி சனிபகவான் சூரியனுக்கும் அவரது மனைவி சாயாவுக்கும் பிறந்தவர். அவருடன் உடன் பிறந்த சகோதரி தபதிசூரியனின் முதல் மனைவி சம்ஜ்ஞாவுக்கும் சூரியனுக்கும் பிறந்த குழந்தைகள்மூவர்.அவர்கள் மனு, யமன் மற்றும் யமுனை ஆவார்கள். சனியின் மனைவிபரம்தேஜஸ்வி.சூரிய புத்திரர்களில் மிகவும் முக்கியமானவர்கள் சனியும்யமனும் ஆவார்கள். அவர்கள் இருவரும் நீதிமான்களாககருதப்படுகிறார்கள். முன்வினையில் அவரவர் செய்த கருமகாரியங்களுக்கேற்ப சனிபகவான்அவரவர்  வாழும் காலத்தில் இப்பூவுலகில் பலாபலன்களை அளிக்கிறார். இப்பூவுலகில் அவரவர் வாழும் காலத்தில்  செய்யும்கரும காரியங்களுக்கேற்ப யமன் அவர்கள் இறந்தபிறகு அவர்களுக்குண்டான பலாபலன்களை அளிக்கிறார். இருவருமே நீதிநேர்மை தவறாமல் தீர்ப்பு எழுதும் சிறந்த நீதிமான்கள். சனிபகவான் ஒருசிறந்த சிவபக்தன். அவன் நிறம் கருப்பு .அவன் அணியும் ஆடை கருப்பு. அவருக்குண்டான ரத்தினம் நீலக்கல் மற்றும் கருப்புக்கல். மலர்களில்  நீல நிறமலர்கள். எண்களில் எட்டு. திசை மேற்கு.சனி   மிகவும் கடுமையானவர்.நேர்மையானவர்.அவருக்குபொய், பித்தலாட்டம் ,மது ,சூது ,அசுத்தம், மிருகவதை,நம்பிக்கைத் துரோகம்மற்றும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவமரியாதை செய்வதுபிடிக்காது. அவரைப்போலவே அவரது பார்வையும் மிகவும் கடுமையானது.சனி பிறந்தவுடன் கண் விழித்து சூரியனைப் பார்த்தவுடன்   சூரியனுக்குகிரகணம் பிடித்தது.அவர் விலங்கு களையும் மனிதர்களையும் தேவர்களையும்கடவுளர்களையும் சரிசமமாகப் பாவித்து அவரவர்  ஊழ்வினைப்படிபலாபலன்களை அளிக்கிறார். இதில் சிவனும்  மகாவிஷ்ணுவும் பிரம்மாவும்அடக்கம். பொதுவாக மக்கள் எண் ணுவது போல் சனிபகவான்கொடூரமானவரோ   மோசமானவரோ அல்லர். அவரவர் செய்த கர்மங்களுக்குஏற்ப  இந்தப் பிறவியில் பலன் களையும் தண்டனைகளையும் அவர்  அளிக்கிறார். சனியைப்போல்கொடுப்பாரு மில்லை  சனியைப்போல் கெடுப்பாருமில்லை என்பர் .குற்றங்களுக்கும்  நற்காரியங்களுக்கும் ஏற்ப தரும நியாயத்தின்படி அவர் நீதி வழங்குகிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதிற்க்கினங்கஅவரவர்களே அவர்களுடைய வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள்கிறார்கள். சனி பகவானை அச்சத்தி னாலும்  பீதியினாலும்  வணங்குவதைவிட பக்தியுடனும் சிரத்தையுடனும் வணங்குவது நல்லது.

சனி கிரகமானது எப்படி

சிவனை நோக்கி பல காலங்கள் தவமிருந்தார்சனி. சனியின் தவத்தை உணர்ந்த சிவபெருமானோ, அவருக்கு காட்சி அளிக்காமல், சோதிக்கும் பொருட்டு காலம் தாழ்த்தியே வந்தார். ஆனால்சனியோ விட்டபாடில்லை. தனது தவத்தை பல யுகங்களாக தொடர்ந்தார்.இந்த தவத்தின் வாயிலாக சிவபெருமானின் மாபெரும் சக்திஉலகையாளும் நிலைகள் பற்றி சனியால் உணர முடிந்தது. அது சிவபெருமானைகாணும் வகையில், சனியை மேலும் உந்தியது. சனியின் தொடர் தவம் சிவனை மிகவும் கவர்ந்தது. அவரது உறுதியை கண்டு இறுதியில்சனியின் முன்பாக ஈசன் காட்சி கொடுத்தார். மேலும் வேண்டிய வரத்தைதரவும் முன்வந்தார். ஆனால் சனி, எனக்கு எந்த வரமும் வேண்டாம். தங்களின்காட்சி கிடைத்ததே என் பாக்கியம் என்று கூறினார். அதே சமயம், இந்த உலகத்தை இயக்கி வரும் தங்களது நிர்வாக பொறுப்பில் என்னால் ஆன உதவியை செய்யும் பாக்கியத்தை மட்டும் தாருங்கள் என்று கோரிக்கை ஒன்றை சிவபெருமானிடம் வைத்தார். சிவபெருமானால், சனியை முற்றிலும் உணர முடிந்தது. தனக்கென்று எதுவும் கேளாமல் உலகை நிர்வகிக்கும் பணியில் பங்கு எடுத்து உதவ வேண்டும் என்ற தூய்மையான பக்தி நிலையை அவர் மெச்சினார். அதன் பிறகுதான் கிரக அந்தஸ்த்தை சனிக்கு தந்தார் சிவன். அண்ட சராசரத்திலும், பூமியின் நிர்வாகத்திலும் மிக முக்கிய பொறுப்பான பணியையும், அதற்காக தனி சக்தியையும் சனிக்கு, சிவபெருமான் வழங்கினார்.அன்று முதல் சனிக்கிரகம் பூமியை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் ஒன்றானது. அது ஒருவர் தன் வாழ்வில் செய்த, அவரது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ற வகையில் பலாபலன்களை வழங்குவது.

 sani-kirakam

கொஞ்சம் விஞ்ஞானம்
சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கிரகமான சனியை சுற்றி அபூர்வமான வளையம் காணப்படுகிறது. இந்த வளையம் முழுவதும் பனித் துகள்களும், சிறு கற்களும், வாயுக்களும் நிரம்பியுள்ளன. இந்த வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள் அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது.இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அக்கிரகத்தின் வளி மண்டலத்துக்கும் இடையே தொடர்புள்ளதைக் கண்டறிந்துள்ளனர்

No comments:

Post a Comment